உயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

மட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்த RJ மேனகாவின் தங்கை.தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் பரமேஸ்வரன் தனுஜன் (31), துரைசிங்கம் வினோகா (31) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் . இந்த விபத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து நேர்ந்தது. நேற்றிரவு 10.50 மணியளவில் விபத்து நடந்தது, விபத்து நடந்த நேரத்தில் வினோகா வாகனத்தை செலுத்தியதாக கருதப்படுகிறது. வாகனம் அதிவேகமாக பயணித்து விபத்து நேர்ந்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இருவரும் ஆசனப்பட்டியை அணியாதமையே விபத்தில் அவர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது. விபத்தையடுத்து வாகன கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு இருவரும் வெளியே வீசப்பட்டனர்.

பரமேஸ்வரன் தனுஜன் திருமணமானவர். கொழும்பு- மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர். அவர் மனைவி, பிள்ளைகளை கொழும்பில் விட்டு விட்டு, திரும்பி வரும்போதே விபத்திற்குள்ளாகினார்.

வினோகா திருமணமாகி பிரிந்து வாழ்கிறார்.பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்தவர்கள் மதுபோதையில் இருக்கவில்லையென்பது உறுதியாகியுள்ளது. இதனால் தூக்க கலக்கம், அதிவேகம் போன்ற காரணங்களினால் விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அதேவேளை வினோகாவும் தனுஜனும் தகாத தொடர்பில் இருந்ததாகவும், அதனால்தான் இருவரும் சென்றார்களெனவும் சொல்லப்படுகிறது, அதேவேளை இருவரும் உறவினர்களாகூட இருக்கலாம்தானே என மேலும் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேனகாவின் கணவர் சந்துரு மச்சாளின் மறைவு பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

திரும்பி வர முடியாத பயணம் தான் 😢

இருந்தும் மீண்டும் ஒருமுறையாவது பார்த்து, பேசிவிட முடியாதா என்ற தேடல் எனக்குள்..

💔

Contact Us