முக கவசமே போடாமல் அலைந்த மன்சூர் அலிகான் – இறுதியில் ICU கவலைக்கிடம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஊர்ஜிதம் அற்ற செய்திகள் வெளியாகியுள்ளது.. சிறுநீரகக்கல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு, கொரோனா பரிசோதனை செய்த வேளை. அவருக்கு கொரோனா இருப்பதாகா வெளியான தகவலை, உறுதி செய்ய முடியவில்லை.

இதனை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவேக் இறுதி நிகழ்விலும் சரி மக்கள் நீதிமன்ற கூட்டங்களிலும் சரி அவர் முகக் கவசம் அணிவதே இல்லை. மேலும் நடிகர் விவேக் இறந்ததை அடுத்து அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை மன்சூர் அலிகான் வெளியிட்டார்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக அவர் மீதுஐந்து பிரிவுகளில் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் உடல் நிலை மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.

Contact Us