ஒரே நாளில் 2500 பேருக்கு தொற்று: மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடையா ?

இலங்கையில் மேலும் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.இதற்கமைய இன்று இதுவரையில் 2,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதனிடையே இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு கோட்டபாய அறிவுறுத்தியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று மாலை(10) இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

Contact Us