இந்த தடை நீக்கப்படும்..! ஊரடங்கில் சில தளர்வுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை தொடர்ந்து வருகின்ற 17-ஆம் தேதி முதல், சில முக்கிய தளர்வுகளை பிரதமர் அறிவித்துள்ளார். அவை எவை எனப் பார்கலாம்:

நல்ல காரியங்களுக்கு, கிரிகைகளுக்கு 30 பேர் வரை உள்ளரங்கில் கூடலாம், உணவங்கள் மற்றும் பப் போன்ற மதுபான விடுதிகளில் உள்ளே சென்று சாப்பிட முடியும். மே 17 முதல் உள்ளூரில் ஹாலிடே சென்று தங்க முடியும். ஹோட்டல் மற்றும் BB விடுதிகளை திறக்கலாம். ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் சந்திக்கலாம். பள்ளிக் கூடங்கள் சுற்றுலாக்களையும், சென்று தங்கும் சுற்றுலாக்களையும் செய்ய முடியும். இவ்வாறு பல தடைகளை பொறிஸ் ஜோன்சன் நீக்கியுள்ளார். மேலும் பிரித்தானியாவில்…

3ல் 2பங்கு மக்கள் தொகைக்கு(முதியவர்களுக்கு) தடுப்பூசி வழங்கப்பட்டு விட்டதாக அவர் பெருமையோடு கூறியுள்ளார். மேற்படி பிரித்தானிய மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விடையம் என்னவென்றால், உரு மாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு செல்வது தான். குறிப்பாக இந்தியா செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதனை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஏன் எனில் இவ்வாறான திரிவு பட்ட புது வைரசுகளை பிரிட்டனுக்குள் கொண்டுவரவேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Contact Us