மேலாடை இல்லாமல் இருக்கும் ஆண், அவரை நெருக்கமாக கட்டிப்பிடித்திருக்கும் ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான ஜூலி சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த சில படங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. இதன் காரணமாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பது, போட்டோஷூட் என சம்பாதித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியீடும் ஜூலி சமீபகாலமாக ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த முறை எல்லை மீறி ஒருவர் மேலாடை இல்லாமல் இருக்க, அவர் மீது இறுக்கமாக கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. இவர் எனக்கு சகோதரர் மாதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சகோதரர் மாதிரி தானே, சகோதரர் இல்லையே எனவும், சகோதரர் மாதிரி இருந்தாலும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி கேவலமாக இருக்கிறது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக ஜூலி கிளாமரான புகைப்படங்களைவெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அசிங்கமாக கமெண்ட் செய்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஜூலி ஒரு நேரலையில் புத்தர் ரேஞ்சுக்கு புத்திமதி கொடுத்தது ரசிகர்களைக் கடுப்பாகி உள்ளது.

 

Contact Us