சட்டமன்றத் தொடர் நடக்கும் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம்’… ‘அதில் எழுதப்பட்டுள்ள வாசகம்’… ஸ்டாலின் வேற லெவல்!

சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

Jayalalitha Photo placed in Kalaivanar Arangam, where assembly session

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பின், முதலாவது சட்டமன்ற கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது.

இதில் தற்காலிக சபாநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி, கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதோடு அதில் எழுதப்பட்டுள்ள வாசகம் பலரையும் கவர்ந்துள்ளது.

Jayalalitha Photo placed in Kalaivanar Arangam, where assembly session

அந்தப் புகைப்படத்தில் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசியல் களத்தில் அதிமுக, திமுக என்றாலே நேரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் மிளிர்ந்து வரும் அரசியல் மாண்புகளுக்கு இது ஓர் உதாரணமாகக் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Contact Us