13 வயது மாணவி அடர்ந்த பகுதியில் சடலமாக- ஆனால் செஃலி எடுத்ததால் மாட்டிய கொலைகார மாணவன் !

ஃப்ளோரிடா மாகாணத்தில் Tristyn Bailey என்ற மாணவி வசித்து வந்தார். இவர் ஒரு சியர் லீடராக இருந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு பிறகு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் திங்கள்கிழமை அதிகாலை 10 மணி அளவில் Tristyn Bailey காணவில்லை எனவும் அவரைத் தேடி தருமாறும் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் Tristyn Bailey படிக்கும் சக மாணவரான Aiden Fucci என்பவர் போலீசாரின் கார் பின்னால் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டு அதன் கீழ் “நண்பர்களே யாராவது Tristyn Bailey பார்த்தீர்களா” என பதிவிட்டு அந்த புகைப்படத்தை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து Aiden Fucci வீட்டுக்கு அருகிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் Tristyn Bailey இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் Aiden Fucci எடுத்த செல்பி புகைப்படம் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.

இந்நிலையில் உடனடியாக போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பொதுவாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களின் புகைப்படங்களை அல்லது பெயரோ எதுவும் சமூக ஊடகங்களில் வெளியாகாது என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை 14 வயதே ஆன குற்றவாளியின் புகைப்படம், பெயர், முழு விவரங்களும் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல் 13 வயதேயான இறந்த இளம் பெண்ணின் புகைப்படம், பெயர் முதலான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது இந்த வழக்கின் முக்கியத்தை நமக்கு உணர்த்துகிறது. மேலும் Tristyn Bailey சடலமாக மீட்கப்பட்ட போது முழு உடையுடன் தான் இருந்துள்ளார். அதனால் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என போலீசார் கூறுகின்றனர். மேலும் Tristyn Bailey உடற்கூறு ஆய்விற்குப் பின்னரே அனைத்து உண்மைகளும் வெளியாகும் என போலீசார் கூறுகின்றனர்.

Contact Us