பாத்ரூம் வீடியோ, பங்கம் செய்த யூடியூப் சேனல்களை பந்தாடிய அர்ச்சனா.. இழுத்து மூடிட்டு போங்கடா என ஆவேசம்

சினிமா நட்சத்திரங்களுக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்களோ. அதேபோல் இணையதளத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர்.  அதனால் நாளுக்கு நாள் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இணையதள பிரபலங்களும்  செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. ஜிபி முத்து போன்று பல சினிமா பிரபலங்களும் காமெடியாக செய்கிறேன் என கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது தொகுப்பாளர் அர்ச்சனா மாட்டியுள்ளார். அதாவது அர்ச்சனா பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஆனால் இவர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனல் ஒன்றை  தொடங்கினார்.

அந்த யூடியூப் சேனலில் தினந்தோறும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு எந்த வீடியோ போடுவது என தெரியாமல் இருந்த அர்ச்சனா அவரது வீட்டில் இருக்கும் பாத்ரூம் டூர் என பெயரிட்டு பாத்ரூம் வீடியோவை வெளியிட்டார். இதனால் அர்ச்சனா பல ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதனை வைத்து சமூகவலைதளத்தில் பிரபலமாக இருக்கும் மதன் கௌரி போன்ற பலரும் அர்ச்சனா விமர்சித்து பல்வேறு விதமாக கிண்டல் செய்து வீடியோக்களை வெளியிட்டனர்.

ஏற்கனவே ஒரு பக்கம் ரசிகர்கள் அர்ச்சனாவை வாட்டி எடுக்கும் நிலையில் மற்றொரு பக்கம் யூடியூப் பிரபலங்களும் பங்கமாய் கலாய்க்க என்ன செய்வது என தெரியாமல் அர்ச்சனா இணையதள நிறுவனத்திடம் எனது பாத்ரூம் டூர் வீடியோவை பற்றி பேசியவர்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டவர்களின் பக்கங்களை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இதனை அறிந்த மதன் கௌரி மற்றும் அவரைப் போன்று அர்ச்சனா பாத்ரூம் வீடியோவை வெளியிட்ட பலரும் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் அர்ச்சனா தங்களது பக்கத்தை மூடி விட்டதாக கூறி, மீண்டும் அர்ச்சனாவை பற்றிய வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us