வயசு 66’… ’16 மனைவிகள் 151 பிள்ளைகள்’… ‘அடுத்த திருமணத்திற்குப் புதுமாப்பிள்ளையாக தயாராகும் முதியவர்’… 90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் காரணம்!

66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வது திருமணத்திற்குத் தயாராகி வருகிறார்.

World’s most fertile’ dad who has 16 wives and 151 children

ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro. இவர் செய்த திருமணங்களைக் கேட்டால் நமக்குத் தலையே சுற்றி விடும். இவர் 16 பெண்களைத் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 151 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் ஒரு படி மேலே தனது அடுத்த திருமணத்திற்குத் தயாராகி வருகிறார் Misheck. மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

World’s most fertile’ dad who has 16 wives and 151 children

ஒவ்வொரு இரவும் 4 மனைவுகளுட்ன் தங்கி வரும், இவர் அவர்களைச் சந்தோசமாக வைத்துக் கொள்வது தான் தன்னுடைய முழு நேர வேலையே எனக் குறிப்பிடுகிறார். 66 வயதான நிலையிலும் மீண்டும் ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள Misheck, அதற்காக அவர் குறிப்பிடும் காரணம் நிச்சயம் 90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும். ஆம், தனது மனைவிகளுக்கு எல்லாம் வயதாகிவிட்டது.

இதனால் இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக Misheck குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய குழந்தைகள் 14 கால்பந்து அணிக்கு போதும் என்ற அளவில் இருப்பதாகக் கூறியுள்ள அவர், 100 மனைவிகளுடன் 1000 குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதே எனது ஆசை எனக் கூறியுள்ளார்.

World’s most fertile’ dad who has 16 wives and 151 children

1983 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த பலதார மண திட்டத்தை, நான் இறக்கும் வரை விடமாட்டேன், என கூறியுள்ள Misheck,  இத்தனை குழந்தைகள், மனைவிகள் இருந்த போதிலும், எனக்கு எந்த ஒரு நிதிச்சுமையும் ஏற்பட்டதில்லை என அடித்துக் கூறுகிறார். இப்படியும் விசித்திரமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்கும் போது தான் ஆச்சரியமாக உள்ளது.

Contact Us