வீட்டை விட்டு வெளியே சென்று ஓராண்டுக்கும் மேல் ஆகிறது, தனியாகவே இருக்கிறேன் இருப்பினும் கொரோனா; எப்படி வந்தது!

இவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் டெல்லியில்தான் வசித்து வருகிறார். தன் நாட்டில் மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் அங்கிருந்து இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான தஸ்லிமா நஸ்ரின் தன் ட்விட்டரில் இது தொடர்பாகப் பதிவிட்டதாவது:

“கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நான் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. வீட்டிலும் தனியாகத்தான் இருந்தேன். வளர்ப்புப் பூனை தான் எனக்குத் துணையாக இருக்கிறது.

நானும் வெளியில் செல்லவில்லை வீட்டுக்குள் யாரையு விடவும் இல்லை. சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு ஆண்டாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்”

என்று பதிவிட்டுள்ளார் தஸ்லிமா நஸ்ரின்.

தஸ்லிமா நஸ்ரின் வங்கதேச-ஸ்வீடிஷ் எழுத்தாளர். இவர் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக தனது எழுத்துப் போராட்டத்தை நடத்தியவர். இந்த வைரஸ் அச்சுறுத்தல் பற்றி தஸ்லிமா தன் முகநூல் பதிவில், “என்னை துரதிர்ஷ்டம் துரத்திப் பிடிக்கிறது. தனியாகவே ஓராண்டு வெளியே செல்லாமல் இருந்தும் ஏதாவது பயனிருந்ததா? வைரஸ் என்னை எப்படியே கண்டுப்பிடித்துக் கொண்டது. ஒரேயொரு நாள் 2 மாதத்துக்கு முன்னால் ஒரு மணி நேரம் மட்டும் வெளியே வந்தேன். அதுவும் கோவிட்-19 தடுப்பூசிப் போட்டுக் கொள்ள, ஒருவேளை என் உயிரை தடுப்பூசிதான் காப்பாற்றியிருக்கும்.

எனக்கு நடந்த துரதிர்ஷ்டங்களைப் பட்டியலிட்டால் முடிவே கிடையாது. இப்போது கொரோனா நோய் என்னையும் பற்றிக் கொண்டது. இதைத் துயரம் என்று கூறுவது சரியாகாது ஏனெனில் நான் அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறேன். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களுக்காகத் துயரம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று வங்கதேச மக்கள் ஈத் பண்டிகைக்காக வெளியில் ஷாப்பிங் வந்து கூட்டம் கூடியதை விமர்சித்து படங்க்ளுடன் அவர் எழுதிய போது, “மரண வைரஸிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட ஈத் பண்டிகையைக் கொண்டாட கூட்டம் கூடுவதும் ஷாப்பிங் செய்வதும் முக்கியமாகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

Contact Us