BREAKING NEWS :பற்றி எரியும் இஸ்ரேல்- ஹமாஸ் மேலும் 132 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது !

காசாவில் எல்லையைக் கடக்க முற்பட்ட 24 பலஸ்தீனர்களை இஸ்ரேல் படை, ஈவு இரக்கம் இன்றி சுட்டுக் கொன்றுள்ளது. இதில் 6 சிறுவர்களும் அடங்குகிறார்கள். இதற்காக தாம் நிச்சயம் பழிவாங்குவோம் என்று கூறியுள்ள ஹமாஸ் விடுதலை இயக்கம், இஸ்ரே மீது ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இன்று சுமார் 132 குறுந்தூர ஏவுகணைகளை, ஹமாஸ் இயக்கம் ஏவியுள்ளது. அது இஸ்ரேல் ராணுவ நிலைகளை தாக்கியுள்ளது. இதனால் கடும் புகை யோடு பல கட்டடங்கள் எரிந்து கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் நகரங்களான காசா, டெல் அவீவி , அஷோக்கிளன் என்று பல முக்கிய நகரங்கள் மீது ஹமாஸ் விடுதலை இயக்கம் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.

 

இதனை அடுத்து முழு அளவில் யுத்தம் ஒன்றில் இறங்க, இஸ்ரேல் தயாராகி வருகிறது… இதனால் ஐ.நா சமை உடனடியாக இந்த.. பிரச்சனையில் தலையிட வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. உடனடியாக போரை தடுத்து நிறுத்த வேண்டிய கடைப்பாட்டில் ஐ.நா உள்ளது.

Contact Us