சீனா எல்லாரையும் முட்டாள் ஆக்கிடுச்சு’… ‘கொரோனா பரவ பின்னணியிலிருந்த அதிபயங்கர காரணம்’… அதிரவைக்கும் தகவலை சொன்ன சீன மருத்துவ நிபுணர்!

கொரோனா பெருந்தொற்றானது திட்டமிட்டே பரப்பப்பட்டுள்ளது எனச் சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லு-மெங் யான் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Coronavirus intentionally released by china, virologist Dr Le-Meng Yan

கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இது சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து தான் முதலில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவே உருவாக்கப்பட்டது எனவும், சீனா திட்டமிட்டே அதைப் பரவ அனுமதித்தது எனவும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லு-மெங் யான் அதிரவைக்கும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

Coronavirus intentionally released by china, virologist Dr Le-Meng Yan

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ”மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும் உலகை வெற்றி கொள்ளும் பொருட்டு புதுமையான உயிரியல் ஆயுதத்தைச் சீனா உருவாக்கியுள்ளதாக டாக்டர் லு-மெங் யான் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரத்தில் அதிக உயிர்ப்பலி வாங்கும் நோக்கில் கொரோனா தொற்று வடிவமைக்கப்படவில்லை எனவும், ஆனால் எதிரி நாடுகளின் சுகாதார அமைப்பை மொத்தமாகச் சிதைக்க வேண்டும்.

அதன் மூலம் சமூக அமைப்பு பாதிப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே சீன நிர்வாகத்தின் திட்டம் என டாக்டர் லு-மெங் யான் தெரிவித்துள்ளார். அவர்கள் இதை வுகான் நகரில் சோதனை முயற்சியாக முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளனர் எனவும், வுகான் நகரம் மொத்தமாக ஒடுங்கிப்போனதே அதற்கான சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Coronavirus intentionally released by china, virologist Dr Le-Meng Yan

இதற்கிடையே 5 முதல் 6 ஆண்டுகள் கணக்கில்லாத தொகை செலவிட்டு உருவாக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று உருவாக்கத்தில்  ராணுவ விஞ்ஞானிகளுக்குப் பங்கிருப்பது தம்மால் நிரூபிக்க முடியும் எனவும், அதைச் சீனாவால் மறுக்க முடியாது எனவும் டாக்டர் லு-மெங் யான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவிடம் சிக்கிய நிலையில் இவை அனைத்தும் அம்பலமாகி உள்ளதாக டாக்டர் லு-மெங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், சீனாவுக்குப் பின்னடைவாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Contact Us