லண்டன் பெரும் ஆபத்தில்- லாக் டவுன் தளர்வு இல்லை- ஏன் எனில் இந்திய கொரோனா 93% அதிகரிப்பு !

பிரித்தானியாவில் 4 இடங்களில் இந்திய திரிவு பட்ட கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. நோத்- ஹாம்டன், பிளக் பேன், பெட்-பேட்ஷியர் மற்றும் போல்டன் ஆகிய 4 நகரங்களில் இந்திய கொரோனா சுமார் 93% விதிதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் அவசரமாக கூடிய பிரித்தானிய அமைச்சரவை, மே 17 தளர்வு மற்றும் ஜூன் 21 லாக் டவுன் தளர்வு பற்றி மீண்டும் விவாதித்துள்ளார்கள். நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால்..

தளர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு விஞ்ஞானிகள் அறிவுரை கூறியுள்ள நிலையில். இந்திய வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் லாக் டவுன் தளர்வுகள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது.

இது அடுத்தவர்களுக்கு தொற்றும் விகிதம் 60% சத விகிதத்தால் கூடியவை என்றும். மேலும் ஆபத்தானவை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் நிலை பிரித்தானியாவுக்கும் வர உள்ளதா ? என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. Source : Could spread of Indian variant jeopardise plans to ease lockdown? Strain is now DOMINANT in four areas where cases have soared by up to 93% in a week – as minister warns tiered restrictions are still on the cards amid rise of hotspots in the North.

Contact Us