ஹமாஸ் இயக்கத்தின் பல தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்- இஸ்ரேல் பெரும் தாக்குதல் !

Hamas confirms several of its top commanders have been killed in airstrikes as Israel vows more attacks to bring ‘total, long-term quiet’.   மிகவும் துல்லியமாக திட்டமிட்டு, புலனாய்வு தகவல்களை திரட்டி இஸ்ரேல் சற்று முன்னர் நடத்திய பெரும் விமானத் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். தமது தலைவர்கள் கொல்லப்பட்ட விடையத்தை, ஹமாஸ் நேரடியாவே ஒத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் இதற்க்கும் தாம் பெரும் தாக்குதல் ஒன்றை தொடுக்க உள்ளதாக அவர்கள் நேரடியா அறிவித்துள்ளார்கள். ஆனால் இஸ்ரேல் இத்தோடு ஹமாஸ் இயக்கத்தை முற்று முழுதாக அழித்து…

இந்த நீண்ட நாள் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எட்டியுள்ளதாம். இதனால் ஹமாஸ் இயக்க முக்கிய தலைவர்களை அது தொடர்ந்தும் குறிவைத்து வான் தாக்குதலை நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் படை, முடிக்கி விடப்பட்டுள்ளது. மேலும் பாலஸ்தீன் வான் பரப்பில், இஸ்ரேலின் ட்ரோன் விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளது. இதனால் இன்று இரவு மேலும் பல தாக்குதல் தொடரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

Contact Us