லண்டனில் வீட்டு வேலை செய்யும் தமிழர்களே ஜாக்கிரதை- காசை மோப்பம் பிடிக்கும் கொலைகார கும்பல் !

கோடைகாலம் அராம்பிக்க உள்ள நிலையில், வீடுகளில் திருத்தவேலை செய்ய பலர் ஆரம்பித்து இருப்பீர்கள். வீட்டை பெரிதாக்குவது. பாத்ரூமை புதுப்பிப்பது என்று பலர் பல வேலைத் திட்டங்களில் இறங்குவார்கள். இதில் பலர் செய்யும் பிழையான வேலை என்னவென்றால். முறையான கம்பெனிகளை அணுகாமல், வாய் வழியாக அறிந்த நபர்களை வேலைக்கு அமர்த்துவது. இப்படியாக அல்பேனியர்கள், போலந்து நபர்கள் மற்றும் றொமேனியர்களை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தான விடையத்தில் போய் முடியலாம். லண்டனில் ஒரு வீட்டுக்கு வேலைசெய்யச் சென்ற இது போன்ற நபர்கள்…

முழு வேலைக்கும் 10,000 பவுண்டுகள் முடியும் என்றும். காசாக தந்தால் நல்லது என்றும் கூறியுள்ளார்கள். இதனை அடுத்து குறித்த பெண் அந்த பணத்தை எடுத்து வீட்டில் பத்திரமாக வைத்திருந்துள்ளார். திருடர்கள் போல இவர்களே வேடமிட்டு உள்ளே வந்து குறித்த பணத்தை கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாது. 3 மாத கை குழந்தைக்கு முன்னால் வைத்தே அந்த தாயை சுருக்கு கயிறு போட்டு கொன்றும் விட்டார்கள். எனவே ஒரு போதும் பழக்கமில்லாத நபர்கள், மற்றும் சரியாக அறியப்படாத
நபர்களை வீட்டு வேலைக்கு எடுக்க வேண்டாம்.

இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பது நடந்த உண்மை சம்பவத்தை பார்க்கும் போது நன்றாக புலப்படுகிறது.

Contact Us