என்ன தான் ‘மனைவி’ மேல ‘பாசம்’ இருந்தாலும் அதுக்காக இப்படியா…! பக்காவா ‘ப்ளான்’ பண்ணி கிளம்பினவருக்கு ‘இடையில’ காத்திருந்த அதிர்ச்சி!

கொரோனா ஊரடங்கில் மனைவியை சந்திக்க தனியார் பேருந்தை திருடி சென்ற கணவர் போலீஸில் சிக்கியுள்ளார்.

kerala husband stole the private bus to meet his wife

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் 30 வயதான பினூப். இவரின் மனைவி திருவல்லாவில் வசிக்கும் நிலையில், பினூப் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அறிவிக்கட்ட நிலையில் பினூப்பிற்கு சொந்த ஊர் செல்ல பஸ் கிடைக்கவில்லை. கோழிக்கோட்டில் இருந்து அவரது சொந்த ஊர் திருவல்லாவுக்கு 270 கிலோமீட்டர் 4 மாவட்டஙக்ளை கடந்து செல்ல வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளார்.

அப்போது கோழிக்கோடு அருகே ஒரு பஸ் நிறுத்ததில் தனியார் பஸ் ஒன்று தனியாக நின்று கொண்டு இருந்ததுள்ளது. பினூப்பிற்கு மனைவி குழந்தைகளை பார்க்கவேண்டும் என்ற காரணத்தினால் அந்த பஸ்சை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்.

அதன்பின் ஞாயிற்றுக்கிழமை காலை கோழிக்கோட்டை விட்டு வெளியேறி, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் வழியாக சென்று கோட்டயம் மாவட்டத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

kerala husband stole the private bus to meet his wife

அப்போது புகழ்பெற்ற குமரகம் சுற்றுலா இடத்தை அடைந்தபோது, அவரை குமரகம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வர செல்வதாக கூறியுள்ளார்.

ஆனால் இவர் கூறுவதை கேட்டு சந்தேகம் அடைந்து போலீசார் விசாரித்தபோது பினூப் உண்மயை ஒத்து கொண்டுள்ளார். அதன்பின் பினூப்பை கைது செய்த போலீசார், பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

அதெநேரம் தனியார் பஸ்ஸின் டிரைவர் குட்டியாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்து இருந்தனர். குட்டியாடி போலீசார் பினூப்பை கைது செய்து அழைத்து சென்ற நிலையில், அவர் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Contact Us