இலங்கை பாதாள உலகக் குழு தலைவர் சுட்டுப் படுகொலை தொடர்பில் வெளிவரும் தகவல்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த கொஸ்கொட தாரக எனும் சந்தேக நபர், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவருமான கொஸ்கொட தாரக என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொஸ்கொட தாரக விசேட நடவடிக்கை ஒன்றிற்காக மீரிகம, ரேந்தபொல பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Contact Us