‘லவ்’லயும் பையன் ‘மாஸ்டர்’ தான் போல.. எப்படி எல்லாம் ‘ஃபீல்’ பண்றாரு பாருங்கய்யா..” வைரலாகும் சுட்டிக் குழந்தையின் ‘இன்ஸ்டா’ பதிவு!!

கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை வேறு நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

Sam Curran pens heartfelt note for girlfriend on her birthday

முன்னதாக, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 7 போட்டிகளில் விளையாடி, ஐந்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், 7 ஆவது இடம் பிடித்து சென்னை அணி வெளியேறியிருந்தது.

ஆனால், இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி, எதிரணியினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும், பழைய ஃபார்முக்கு சிஎஸ்கே திரும்பியுள்ளதால், தோனி தலைமையில், நான்காவது கோப்பையைக் கைப்பற்றும் என்றும் சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து இளம் வீரர் சாம் குர்ரான் (Sam Curran), கடந்த சீசன் முதல் சென்னை அணிக்காக சிறப்பான பங்காற்றி வருகிறார்.

ஆல் ரவுண்டரான சாம் குர்ரான், கடந்த சீசனில் சென்னை அணி மோசமாக ஆடிய போதும், தனியாளாக சில போட்டிகளில் போராடி, வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளார். சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர், இன்ஸ்டாவில் போட்ட பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 22 வயதேயான சாம், தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்தினை கூறியுள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டி முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பியுள்ள சாம், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். ‘மிகப்பெரிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும், என்னால் உனதருகில் இருக்க முடியவில்லை. இன்றைய நாள், உனக்கு அற்புதமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். உன்னை விரைவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். அனைத்திற்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

 

இளம் வீரர் சாம் குர்ரான், ஐபிஎல் போட்டிகள் மூலம் அதிக பிரபலமான நிலையில், அவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளமுள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us