இத உங்ககிட்ட சொல்றது என்னோட கடமை”.. ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி ‘பத்மப்ரியா’ அதிரடி அறிவிப்பு!

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிருந்த பத்மபிரியா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

padmapriya releave from makkal needhi maiam party

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களமிறங்கிய இளம்பெண் பத்மப்ரியா, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டியிருந்தார்.  தனது முதல் தேர்தலிலேயே 33401 வாக்குகளை அள்ளி, அந்த தொகுதியில் மூன்றாம் இடத்தையும் அவர் பிடித்திருந்தார். இதனால், அக்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக பத்மப்ரியா பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் நீதி மைய்யத்தில் இருந்து தான் விலகுவதாக ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்த தனது பதிவில், ‘சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த தன்னை, ஏற்றுக் கொண்டு வாக்களித்தமைக்கு மதுரவாயல் தொகுதி மக்களுக்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன், கமல்ஹாசனின் மீது நம்பிக்கை குறைந்த காரணத்தால், அக்கட்சியில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us