பிரிட்டனில் திடீரென 100% விகிதத்தால் அதிகரித்த இந்திய கொரோனா தொற்று: பொறிஸ் பதற்றம் !

பிரித்தானியாவில் குறிப்பாக 4 இடங்களில் உருமாறிய இந்திய கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது என்பது தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த 4 பகுதிகலீல் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட சுமார் 10 மில்லியன் மக்களுக்கு, உடனடியாக 2ம் ஊசியை போடுமாறு பொறிஸ் ஜோன்சன் உத்தரவிட்டுள்ளார். வேறு இடங்களில் ஏற்றப்பட்டு வந்த 2ம் ஊசிகளை உடனடியாக குறித்த இந்த 4 இடங்களுக்கு கொண்டு சென்று அதனை ஏற்றி முடிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2ம் ஊசிக்கு தற்போது காத்து நிற்க்கும் பலர் மேலும் சில வாரங்கள் காத்திருக்க நேரிடும் என்றும். இந்திய உரு மாறிய கொரோனா தாக்கியுள்ள 4 பகுதிகளுக்கு உடனடிய நிவாரணங்களை அனுப்ப பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளை அந்த 4 இடங்களையும் லாக் டவுன் செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது,

Contact Us