சீமானின் தந்தையை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிலும் சோகம்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்.

AIADMK Co-ordinator O.Panneerselvam brother Balamurugan died

தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என மூன்று சகோதரர்கள். இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்றிரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அவர் திரும்பினார்.

AIADMK Co-ordinator O.Panneerselvam brother Balamurugan died

இந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.

AIADMK Co-ordinator O.Panneerselvam brother Balamurugan died

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனின் மறைவிற்கு, அனைத்துக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us