150 ஹாமாஸ் நிலைகள் மீது இரவு இரவாக இஸ்ரேல் தாக்குதல்- 1,000 குண்டுகளை போட்டது !

நேற்று இரவு முழுவதுமாக, ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 150 நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டிலறி எறிகனை கொண்டும், அப்பாச்சி ஹெலிகொப்டர் மூலமாகவும் மேலும் போர் விமானங்களைக் கொண்டு இந்த கடும் தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில். சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியின் ஒரு முனையை, இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில்…

அங்கே தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும். நேற்று இரவு மட்டும் சுமார் 1,000 குண்டுச் சத்தங்களுக்கு மேல் கட்டதாக அப்பிரதேசத்தை அண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 11 மூத்த தலைவர்கள், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். ஹமாஸ் விடுதலை இயக்கம் மீண்டும் தனது போராளிகளை ஒன்றினைத்து, பலதிலடி கொடுக்க நேரம் கொடுக்காமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.

தமிழர் போராட்டங்களுக்கு ஆரம்பிய காலத்தில் இருந்து உதவி வந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களின் பிரிவுகளில் ஒன்று தான் ஹமாஸ். இவர்கள் மீது நடக்கும் இந்த கண்மூடித் தனமான தாக்குதலை தமிழர்கள் நிச்சயம் கண்டிக்க வேண்டும்.

Contact Us