BREAKING NEWS: பிரிட்டன் பெரும் ஆபத்திலா ? இந்திய வைரசால் 4 பேர் சற்று முன்னர் இறந்தார்கள் !

பிரித்தானியாவில் சற்று முன்னர் 4 பேர் இந்திய உருமாறிய கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள் என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு பல அதிகாரிகள் இந்த தகவலை உடனடியாக தெரியப்படுத்தியுள்ள அதேவேளை. சுகாதார அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். ஜூன் 21 முழுமையாக திறக்கப்பட உள்ள லாக் டவுனை சற்று பிற்போடும் படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் அதி கூடிய பரவும் திறன் வாய்ந்ததோடு மட்டுமல்லாமல். உயிராபத்தை விளைவிக்கும் மிகவும் கொடுமையான வைரஸ் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது பிரித்தானியா உணர ஆரம்பித்துள்ளது. இன் நிலையில், போல்டன், பிளாக் பேன், பெட்பேட் ஷியார் என்று இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் இது திடீரென பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் , இந்தியாவுடனான விமான தொடர்பை பிரித்தானியா உடனே துண்டிக்காதது தான் என்கிறார்கள்.

பல நாடுகள் உடனடியாகவே விமான சேவைகளை துண்டித்த போதும். பிரித்தானியா கடைசி நேரத்தில் தான் துண்டித்தது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us