லண்டனில் சர்வ சாதாரணமாக நடக்கும் கத்திக் குத்துகள்: தமிழர்களே ஜாக்கிரதை !

பிரித்தானியாவில் லாக் டவுன் நேரத்தில் குறைந்திருந்த குற்றச் செயல்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. லண்டன் தெருக்களில் தினம் பல கத்திக் குத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதில் ஆள் மாறாட்டத்தில் வேறு நபரை குத்துவது. போதைப் பொருட்கள் பாவித்து விட்டு, தெரியாத ஒரு நபரை வேண்டும் என்றே தாக்குவது என்று பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தமிழர்களே இரவு நேரத்தில் உங்கள் பிள்ளைகளை, அதுவும் இளைஞர்களை வெளியே அனுப்புவது கூட தற்போது ஆபத்தான ஒரு விடையமாகவே உள்ளது.. ஏன் எனில்…

என்ன நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது. நேற்று இரவு(14) இம்பீரியல் காலேஜ்க்கு அருகாமையில் அக்டன் என்னும் இடத்தில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கே உள்ள செயின்ஸ் பெரியில் வேலை செய்த தமிழர் ஒருவர் குறிப்பிடுகையில். போதையில் சென்ற 3 பேர் கொண்ட கறுப்பின இளைஞர் குழு ஒன்று, சும்மா தமது தெனாவட்டை காட்ட அங்கே நின்ற அப்பாவி ஒருவரை கத்தியால் குத்தினார்கள் என்று அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

Contact Us