1ம் ஊசி 2ம் ஊசி என்று 2 தடுப்பூசி எடுத்த மருத்துவருக்கு இந்திய உருமாறிய கொரோனா தொற்றியது !

பிரித்தானியாவில் 4 மாவட்டங்களில் இந்திய உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இது முழு பிரித்தானிய மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள விடையமாக உள்ளது. இது நாள் வரை தடுபூசி எடுத்த நபர்களை இது தாக்குமா என்ற பெரும் கேள்வி, சந்தேகமாகவே இருந்து வந்தது. ஆனால் இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது. அதாவது மருத்துவர் ஒருவர் பைஃசர் தடுப்பூசி எடுத்துள்ளார். 1ம் தடுப்பூசி மற்றும் 2ம் தடுப்பூசி என்று 2 தடுப்பூசிகளையும் அவர் எடுத்து விட்டார்.

ஆனால் அவருக்கு இந்திய உரு மாறிய கொரோனா தொற்றியுள்ளது. இது போல தாதி ஒருவருக்கும் பிளாக் பேன் நகரில் தொற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்கும் நிலமை மோசமாகவில்லை என்றும். சாதாரணமாகவே உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது. அவர்கள் வைத்தியசாலை செல்லவில்லை என்றும். வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அறியப்படுகிறது. எனவே இதில் இருந்து புரிவது என்னவென்றால். இந்திய உரு மாறிய கொரோனா சிலவேளைகளில் தடுப்பூசி எடுத்த நபர்களையும் தாக்குகிறது என்பது தான்.

இப்படி எத்தனை பேருக்கு நடக்கிறது என்று ஒரு தரவை சேகரித்த பின்னரே இது தொடர்பாக முழு அளவிலான அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Contact Us