வேலிடிட்டி முடிய போகுதேன்னு ஃபீல் பண்ணவங்களுக்கு ஹேப்பி நியூஸ்…’ – ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ‘செம’ ஆஃபர்…!

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

jio is offering various offers customers as the Corona

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படியும், பாதி ஊழியமும் கொடுக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நிறுவனங்களில் பலரை வேலையை விட்டும் எடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக மக்கள் பண நெருக்கடியில் இருப்பதால் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதென்னவென்றால், பணம் இல்லாமல் ரீச்சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலம் முழுவதும் மாதம் 300 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதில், வருடாந்தர திட்டங்களுக்கு (Annual plans) ரீச்சார்ஜ் செய்தவர்களுக்கு கொரோனா கால சலுகைகள் பொருந்தாது எனவும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

Contact Us