சடலமொன்றால் இலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!

பானந்துறை பகுதியில் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட சடலம் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பானந்துறையில் உள்ள வத்தல்பொல பகுதியில் வசிக்கும் 74 வயதுடைய மூதாட்டி பானந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து அவர் 12ஆம் திகதி உயிரிழந்தார். இவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி பொது சுகாதார ஆய்வாளரின் ஒப்புதலுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும், இறந்தவர் முன்னர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிசோதனை அறிக்கை பெறப்பட்டது.

கொரோனா சோதனை அறிக்கையின்படி, அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் இறந்தவரின் உடல் ஏற்கனவே பானந்துறையில் உள்ள ஒரு மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்படி, மலர்ச்சாலையில் பணியாற்றும் ஊழியர்களையும் குடியிருப்பாளர்களையும் தனிமைப்படுத்த பொது சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Contact Us