சர்ச்சை மனிதன் ப்ளூ சட்டை மாறனின் திரைப்படத்தின் சர்ச்சை ஆன்டி இந்தியன் ஃபர்ஸ்ட் லுக்!

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கும் ஆன்டி இந்தியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல வலை தள திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது தனித்துவமான விமர்சனங்களால் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தான் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆன்ட்டி இந்தியன் எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

படத்தில் நரேன், ராதா ரவி உள்ளிட்டோருடன் நிறைய புதுமுகங்களும் நடித்துள்ளனர். ஆதம்பாவா தயாரித்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலையில், ஆன்டி இந்தியன் படத்துக்கு சென்சார் குழுவினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிராக முறையீடு செய்துள்ள மாறன் தற்போது படத்தின் முதல் தோற்றத்தை வெளியீட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us