மருத்துவ உலகினர் மிரட்சி: ஓரல் செக்ஸ் மட்டும் தான்.. உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

உடலுறவு வைத்துக் கொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என யாராவது கேட்டால் அதற்கு ஒரு தீர்வு உள்ளது. சரோகசி என்று கூறப்படும் வாடகைத் தாய் முறையில் உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே மருத்துவ உலகின் சமீபத்திய கண்டுபிடிப்பாகும். வாடகை தாய் முறையில் ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கரு முட்டைகளையும் வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தி கருவை உருவாக்கும் முறையாகும்.

ஆனால் வாடகை தாய் முறையிலும் இல்லாமல் உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என யாரேனும் நம்மிடம் கேட்டால் இந்த கேள்வியே சிறுபிள்ளைத்தனமானது என்றே பதில் கூற முடியும்.

ஆனால் உடலுறவு கொள்ளாமலே, யோனி எனப்படும் கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதை இல்லாமலே ஒரு 15 வயது சிறுமி கர்ப்பமடைந்தார், அதுவும் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

கற்பனைக்கு எட்டாத மருத்துவ உலகையே புரட்டிப் போட்ட அப்படி ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்திருக்கிறது. இது மருத்துவ பத்ரிகை ஒன்றிலும் வெளியாகி உள்ளது.

15 வயது சிறுமி ஒருவர் வயிற்றில் கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரின் கையிலும் கூட வெட்டுக்காயங்கள் உள்ளன. அவரின் ஆழமான காயங்களை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். 10 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

9 மாதங்களுக்கு பின்னர் வயிற்றில் வலி ஏற்படவே அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். அச்சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், அவரின் பழைய மருத்துவ அறிக்கையையும் பார்த்து ஆச்சரியத்தில் உறைகிறார். ஆம் அச்சிறுமி கர்ப்பம் தரித்திருந்தார். வெறும் 2 செ.மீ மட்டும் நீளம் கொண்ட யோனி அவருக்கு இருந்தது. இதன் காரணமாக அவரால் உடலுறவு கொள்ளவோ, கர்ப்பம் தரிக்கவோ வாய்ப்பில்லை என்பதாலேயே மருத்துவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இருப்பினும் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லாததால் அச்சிறுமிக்கி சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பிரசவசத்திற்கு பிறகு மருத்துவர்கள் அச்சிறுமியை விசாரித்திருக்கின்றனர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

தன்னால் உடலுறவு கொள்ள முடியாது என்பதால் அவருடைய ஆண் நண்பருடன் ஓரல் செக்ஸ் எனப்படும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அச்சமயம் அவருடைய பழைய ஆண் நண்பர் வரவே, மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆண் நண்பர் சிறுமியை வயிற்றில் குத்தியுள்ளார்.

அச்சிறுமிக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வந்ததில்லை. இருப்பினும் 9 மாதங்களாக அவரின் வயிற்றில் கரு வளர்ந்து வந்துள்ளது. இது எப்படி என தனக்கு தெரியவில்லை என்று அச்சிறுமி தெரிவித்திருக்கிறார்.

ஓரல் செக்ஸ் மூலமாகவே அவர் கர்ப்பமடைந்திருக்கிறார் என மருத்துவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ஓரல் செக்ஸ் வைத்த பின்னர் அச்சிறுமிக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக் குத்து காயத்தின் மூலம் சில விந்தணுக்கள் அவரது இனப்பெருக்க உறுப்புகளை அடைந்திருக்கலாம். அப்போது காயம் காரணமாக அவருடைய உடம்பு ஆசிட் உற்பத்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆசிட் உற்பத்தி இருந்திருந்தால் விந்தணுக்கள் இனப்பெருக்க உறுப்புகளை எட்ட முடியாமல் போயிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது மருத்துவ ரீதியாக மிக மிக மிகவும் அரிதிலும் அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவ உலகினரை வியக்க வைத்த இந்நிகழ்வு 1988ம் ஆண்டு மருத்துவ பத்ரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us