பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு வாய்ப்பா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையும் பின்னணியும்!

 

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய அவர்கள் வேண்டியதை அடுத்து. அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் ஸ்டாலின் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. இந்த முறை காங்கிரஸ் இதனை எதிர்க்காது என்று கூறப்படுகிறது. ஏன் எனில் ஸ்டாலின் கைகளில் தான் தற்போது தமிழக கங்கிரசின் குடுமி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டார் ஸ்டாலின். ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் இந்தவேளையில் அந்தக் கோரிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது. எனவே ஸ்டாலின் நல்லதொரு முடிவை எட்டுவார் என்று பலராலும் கூறப்படுகிறது. தனது ஆட்சிக் காலத்தில், இந்த 7 பேரையும் விடுதலை செய்து விட வேண்டும் என்று ஸ்டாலின் யோசித்திருப்பதே ஈழத்தமிழர்களுக்கு அவர் தனது முழு ஆதரவை காட்டுவது புலப்படுகிறது.

Contact Us