லண்டனில் சற்று முன்னர் இஸ்ரேல் தூதரகம் முற்றுகை: ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டார்கள் !

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை, 7 நாடுகளில் வசிக்கும், பல சமூகத்தினர் சேர்ந்து முற்றுகையிட்டு பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதில் பிரித்தானிய எதிர்கட்சியான லேபர் கட்சியின் தலைவரும் கலந்துகொண்டுள்ளதோடு. பாலஸ்தீன மக்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். இதில் ஈழத் தமிழ் இளைஞர்களும் கலந்து கொண்டு, தமிழர்களின் பெரும் ஆதராவு பாலஸ்தீனர்களுக்கு உண்டு என்பதனை நீரூபித்துள்ளார்கள். உலகில் எந்த நாடுகளில் எல்லாம் விடுதலைக்காக ஒரு சமூகம் போராடுகிறதோ. அங்கே துணையாக தமிழனும் நிற்பான் என்று உணர்த்தியுள்ளார்கள் லண்டன் தமிழர்கள்.

இது போல ஏனைய நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் இஸ்ரேலின் இந்த இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சர்வதேச அரங்கில் தமிழர்கள் அரசியல் நிலைக்க வேண்டும் என்றால் நாமும் சர்வதேச அரசியலில் இறங்கித் தான் ஆக வேண்டும். ஆனால் வேறு ஒரு அமைப்பு நடத்தும் ஒரு போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்வது ஒரு புறம் இருக்க. இதனை தமிழர்களே ஏற்பாடு செய்து, தனிப் போராட்டமாக பாலஸ்தீனர்களையும் இணைத்து, இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் இறங்குவது நல்லது.

இதற்கு எந்த அமைப்புகள் முன்வரப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் ஒரு 2009 முள்ளிவாய்க்கால் நிலை பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. அதனை தமிழர்கள் தடுக்கவேண்டும். ஏனைய போராடும் சமூகங்களோடு நாமும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே. எமது போராட்டங்களிலும் அவர்கள் பங்கு பெறுவார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். எனவே போராடும் சமூகங்கள் ஒன்றாக இணைந்திருப்பது நல்லது.

Contact Us