மெகான் ஹரியின் பட்டங்களை பறியுங்கள்- மாளிகைக்குள் அழுத்தம் கொடுக்கும் அதிகாரிகள் !

மகாராணியாரின் கணவர் இறந்து, சில வாரங்களே ஆகும் நிலையில். மீண்டும் அரச குடும்பம் மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் இளவரசர் ஹரி. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ளது அரன்மனை அதிகாரிகள், ஹரி மற்றும் மெகான் ஆகியோரின் பட்டங்களை(இளவரசர்) பறிக்குமாறும். அவர்களை சாதாரண மனிதர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும், மகாராணிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இளவரசர் பிலிப் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்ள வந்த ஹரியை மிகவும் அன்பாக வரவேற்றார் அவரது அப்பா சார்ளஸ். மேலும்…

அவரது அண்ணா வில்லியம் அவர்களும் ஹரியை தனியாக சந்தித்துப் பேசி, சமாதானப்படுத்த முயன்றார். இதேவேளை மகாராணியார் ஹரிக்கு கொடுக்கவேண்டிய மரியாதைகளை கொடுத்து, ஊர்வலத்தில் மதிப்பளித்தார்.. ஆனால் அமெரிக்கா சென்ற ஹரி மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, திரும்பவும் அரச குடும்பம் தொடர்பாக அவதூறுகளை பரப்பி. அதனூடாக காசை சம்பாதிக்க முனைந்து வருகிறார். ஹரி கலந்து கொள்ளும் ஒவ்வொரு TV நிகழ்ச்சிக்கும், அவருக்கு பெரும் தொகைப் பணம் கொடுக்கப்படுகிறது.

இதனை வாங்கிக் கொண்டு அவர் பிரித்தானிய அரச குடும்பத்தை தூற்றி வருகிறார்கள். தான் வளர்ந்த குடும்பம் என்று கூட பாராமல் தனது ஒவ்வொரு உறவினர்கள் மீதும் பழி போடும் ஹரி, அரச குடும்பத்திற்கு துரோகம் செய்வதாக, அங்கே வேலை பார்க்கும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

Contact Us