கடைசி நேரத்தில் நடந்த குழப்பம்.. மறு வாக்கு எண்ணிக்கை, கமலின் வியூகம் ஜெயிக்குமா?

தமிழ் சினிமா நடிப்பில் முடிசூடா மன்னனாக இருப்பவர் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பிற்கு என பெயர் பெற்றவர்தான் கமல்ஹாசன்.  தொடர்ந்து தமிழ் சினிமாவை தாண்டி பல படங்களில் பணியாற்றிய வந்த கமல்ஹாசன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சித் தொண்டர்களை தேர்தலில் போட்டியிட வைத்தார்.

ஆனால் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் கமல்ஹாசன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் முதலில் கமல்ஹாசன்தான் முன்னிலை என வகித்துவந்த தேர்தல் ஆணையம் பிறகு இறுதியாக கமல்ஹாசன் தோல்வி அடைந்ததாக அறிவித்தது.

இது பலரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். ஆனால் தொடர்ந்து கமலஹாசன் ஆதரவாக பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். ஆனால் கடந்த 11ஆம் தேதி கமலஹாசன் எதிர்த்து போராடி வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் பதவியேற்றுக்கொண்டார். தற்போது கோவையின் தெற்குப் பகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Contact Us