தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கொடூரன்!

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட வற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கை உள்ளிட்ட உதவிகள் கேட்டு உறவினர்களும், நண்பர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியின் உயர்மட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘டுவிட்டர்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அதில், ‘என் நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. உதவி செய்யும்படி, என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்தார். ‘என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக அந்த நபர் கூறியுள்ளார்.

இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?’ எனக் கேள்வி எழுப்பிஉள்ளார்.அந்த நபர் மீது, போலீசில் புகார் அளிக்கும்படி பலரும் டுவிட்டரில் பதில் அளித்து வருகின்றனர். கொரோனாவுக்காக உதவி கோருபவர்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் நாடு முழுதும் அதிகரிக்க துவங்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us