காலியாக இருந்த ஹமாஸ் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் போர் விமானங்கள்- ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது !

பாலஸ்தீன் தேசத்தினுள் ஊடுருவி, ஹாமாஸ் இயக்க தலைவர் வசித்து வந்த வீட்டை, தாக்கி அழித்துள்ளது இஸ்ரேலின் போர் விமானங்கள். இருப்பினும் பல நாட்களுக்கு முன்னரே ஹமாஸ் தலைவர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும். வீடு காலியாகவே இருந்தது என்றும் ஹமாஸ் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும். போரை முடிவுக்கு கொண்டுவரவும், இன்று ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுவதாக சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் விமான தக்குதலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும். இதே நேரம் ஹமாஸ் நடத்தும் ராக்கெட் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் உதவும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Contact Us