தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டம் அமுல் இருக்கும் நிலையில் இலங்கையில் கொடி கட்டிப்பறந்த விபச்சாரம்!

குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் “லுனாவ பட்ரி” பெட் உட்பட்ட இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக தங்குமிடங்களை வழங்கி வரும் அறைகள் என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது விடுதியின் முகாமையாளர் தப்பிச்சென்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்- களுத்துறை, மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 42இற்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டம் அமுல் செய்யபட்டு நிலையில் விபச்சார விடுதி இயக்கப்பட்டமை கடுமையான சட்டமீறலாகும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Contact Us