பிரிட்டனில் 8% சத விகிதத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பு: இந்திய கொரோனாவே காரணம் !

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று விகிதம், 8% சத விகிதத்தால் அதிகரித்துள்ளது. இது இந்திய உரு மாறிய கொரோனாவின் தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளது. நாளை முதல் மேலும் லாக் டவுன் இலகுவாக்கப்படவுள்ள நிலையில், இந்திய கொரோனாவின் தொற்று மேலும் பல மடங்காக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.

ஜூன் 21 அறிவிக்கப்படவுள்ள மேலும் இலகுவான லாக் டவுனை தற்போது தள்ளிப் போட, அரசு ஆலோசனை நடத்தி வருவதோடு, இந்திய கொரோனா தொற்று அதிகம் காணப்படும் 4 மாநிலங்களில், ஒரு நாளைக்கு 1லட்சம் ஊசிகளை போட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us