பேஸ்புக் நட்பால் விபரீதம்.. காதல் வலையில் சிக்க வைத்து 22 வயது பெண்ணை வேட்டையாடிய 25 காம இளைஞர்கள்

 

பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆன பெண் 25 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் தனது பெற்றோருடன் உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறார். எனினும் இந்த பெண் டெல்லியில் தனியாக் தங்கியிருந்து வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதாகும் சாகர் என்பவர் இந்த பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானார். இருவரும் செல்போனில் ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணை சாகர் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த பெண்ணும் சாகரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய சாகர் தனது சொந்த ஊருக்கு வருமாறும் அழைத்துள்ளார். அங்கு பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசிவிட்டு அப்படியே இளம் பெண்ணின் வீட்டிலும் பெற்றோரை விட்டு பேச வைப்பதாகவும் சாகர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளம்பெண் கடந்த மே 3-ஆம் தேதி ஹோதல் பகுதிக்கு சென்று தன்னுடைய காதலன் சாகரை சந்தித்துள்ளார் . ஆனால் எப்படியோ பேசி அந்தப் பெண்ணை, ஒரு காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்ற சாகர், தானும் பியர் அடித்து. அந்தப் பெண்ணுக்கும் பியர் அடிக்க கொடுத்துள்ளார். இருவரும் பியர் போதையில் இருந்துள்ளார்கள்.

பின்னர் சாகரின் சகோதரர் சமுந்தர், அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மறுநாள் காலை பழைய இரும்பு வியாபாரம் பார்த்து வந்த நபரிடம் அந்த பெண்ணை அழைத்து சென்ற நிலையில் அங்கும் 5 பேர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை பதர்பூர் அருகே வீசி சென்றுவிட்டனர். இதையடுத்து சிகிச்சை பெற்ற அந்த பெண் மே 12 ஆம் தேதி ஹசன்பூர் காவல் நிலையத்தில் 25 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முக்கிய நபரான சாகரை காவல் துறையினர் கைது செய்துவிட்டு தலைமறைவாக உள்ள பிறரை தேடி வருகிறார்கள்.

பேஸ் புக் காதல், பெண்கள் சரக்கு போடும் பழக்கம் இவை இரண்டுமே எங்கே கொண்டு போய் விட்டுள்ளது என்று பாருங்கள்.

Contact Us