கனா’ பட இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி காலமானார்.

Director ArunRaja Kamaraj\'s wife succumbs to COVID 19

இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக களமிறங்கிய அருண்ராஜா காமராஜா, பீட்சா, தெறி, காக்கிச்சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் இவர் எழுதி, பாடிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Director ArunRaja Kamaraj's wife succumbs to COVID 19

இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜா இயக்குநராக அறிமுகமானார். இந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகில் 15’ என்ற திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் தற்போது அருண்ராஜா காமராஜா ஈடுபட்டு வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாயநாயகான நடித்து வருகிறார்.

Director ArunRaja Kamaraj's wife succumbs to COVID 19

இதனிடையே அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அருண்ராஜா காமராஜாவின் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us