முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளை முடக்க பொலிஸார் முயற்சி; நேரடி ரிப்போர்ட்டர்!

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் வருடம் தோறும் மே 18 தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.  யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைத்து உலகம் பூராகவும் உள்ள தமிழ் உறவுகள் மே 12 தொடக்கம் 18 வரை இனப்படுகொலை வாரத்தை அனுஸ்ரிப்பதோடு மே 18 ம் திகதி அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அதிகளவான உறவுகள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் மே 18 பாரிய அளவில் நினைவேந்தல் நிகழ்வு வருடம்தோறும் இடம்பெறும் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த 27 பேருக்கு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றுள்ள அதேவேளை இன்றும் சுமார் மேலும் 20 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பெலிஸார் வீதித் தடைகளை போடுவதற்கு பொருட்கள் கொண்டு வந்து இறங்கியுள்ளனர்.  இதேவேளை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸ் நிறுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Contact Us