‘5 வருட பார்ட்னர்ஷிப்’… ‘திருமண நாளை கொண்டாடிய பிரபலம்’… வியக்கும் ரசிகர்கள்!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Cricketer Dilshan Munaweera celebrated his 5th wedding anniversary

இலங்கை அணிக்காக பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் தில்ஷன் முனவீரா. இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் சஞ்சீவனி பலிஹகரா என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Cricketer Dilshan Munaweera celebrated his 5th wedding anniversary

இந்த நிலையில் சமீபத்தில் முனவீரா – சஞ்சீவனி தம்பதி தங்களது 5ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். இதையடுத்து முனவீரா ட்விட்டரில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ”எங்களுக்குத் திருமணநாள் வாழ்த்துக்கள், 5 ஆண்டில் சிறந்த பாட்னர்ஷிப்பில் அடியெடுத்து வைக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Cricketer Dilshan Munaweera celebrated his 5th wedding anniversary

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் தில்ஷன் முனவீரா கடந்த 2017ம் ஆண்டு 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம் பிடித்தார். உள்ளூர் போட்டிகளில் அவர் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

Contact Us