வாழ்க்கைய’ பறிகொடுத்திட்டு வந்து நிக்குறோம்..; ”உண்மை’ தெரிஞ்ச உடனே ‘கோர்ட்டின்’ அதிரடி தீர்ப்பு…!

செய்யாத குற்றத்திற்காக 31 ஆண்டுகள் சிறையில் செலவிட்ட சகோதரர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் உலகம் வியக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Brothers jailed for 31 years for no crime United States

அமெரிக்காவில் கடந்த 1983ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன் என்ற சகோதரர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இருவரும் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிக்க தொடர்ந்து போராடி வந்தன. மேலும் தங்கள் மீது தவறு இல்லை என்பதை DNA பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தின. அதன்பின் சுமார் 31 ஆண்டுகள் கழித்து 2014-இல் மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட போது, மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன் இந்த வழக்கில் அவர்கள் இருவரும் சிக்கிய போது 19 மற்றும் 15 வயது டீன் ஏஜர்கள்.

ஆயிரம் பாத்தாயிரம் இல்லை சுமார் ரூ.550 கோடியை அறிவித்துள்ளது நீதிமன்றம். அதன்படி தலா ஒருவருக்கு ஆண்டுக்கு 7 கோடி வீதம் இந்த இழப்பு தொகை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன், ‘எங்களை போன்று செய்யாத குற்றத்திக்காக பலர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். எங்களுக்கே 31 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தான் நியாயம் கிடைத்தது. அவர்களும் எங்களை போலவே விடுதலை பெற வேண்டும் என விரும்புகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

Contact Us