கடுமையான கெடுபிடிக்கு மத்தியில் நந்திக்கடற்கரையில் நினைவேந்தல் செய்த சிவாஜி!

இலங்கை அரசின் தடைகளைத் தகர்த்து நந்திக்கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக தமிழ் தேசியக் கட்சியின் பொதுசெயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் நந்திக்கடற்கரையில் சுடரேற்றி, மலர்தூபி அஞ்சலி செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தடைகளைத்தாண்டி இந் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் அவர் மேற்கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை பயங்கரவாதத்தினை தூண்டாத வகையிலும் சுகாதார முறைப்படியும் மேற்கொள்ள முடியும் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றையதினம் அனுமதி அளிந்ததிருந்தது. எனினும் பொலிஸார், இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்கள் குறித்த நினைவேந்தலைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery

Contact Us