டவுனிங் வீதிக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஆரம்பமானது !

பிரித்தானியாவில் காலை 10 மணி முதலே, பிரதமர் அலுவலகம் முன்பாக முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. பல தமிழர்கள் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சியோடு முடிக்கிறார்கள். தமிழ் இளையோர் அமைப்பு(TYO) இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ள நிலையில். மாலை 3 மணி தொடக்கம் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது. இதனை பிரித்தானிய ஒருங்கிணைப்புக் குழு(TCC) நிகழ்த்தவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. பிரித்தானிய கால நிலை மிகவும் மோசமாக உள்ள இந்த சூழ் நிலையில் கூட பல தமிழர்கள் அங்கே சென்று வருகிறார்கள்.

Contact Us