இவரை புடிச்சு கொடுத்தா ‘ஒரு லட்சம்’… ‘பிரபல வீரரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த காவல்துறை’… பரபரப்பை கிளப்பியுள்ள அறிவிப்பு!

இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் தேடப்படும் குற்றவாளியாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

Delhi Police announces ₹1 lakh reward for info on Sushil Kumar

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் சுசில் குமார். இவருக்கும் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுசில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியுள்ளனர்.

Delhi Police announces ₹1 lakh reward for info on Sushil Kumar

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாகர் தன்கட் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, காவல்துறை கொலைவழக்கு பதிவு செய்து மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக சுசில் குமாரை அரியானா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, மல்யுத்த வீரர் சுசில் குமார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதேபோல இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் மற்றொரு நபரான அஜய் குறித்துத் தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Delhi Police announces ₹1 lakh reward for info on Sushil Kumar

இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றம் மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, சுசில் குமார் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Contact Us