‘என்ன தான் அமெரிக்கால போய் லட்சக்கணக்கா சம்பாதிச்சாலும்…’ ‘வாழ்க்கையில ஒரு நிறைவு இல்ல…’ ஐ.டி இஞ்சினியர் எடுத்த ‘அந்த’ முடிவு…!

அமெரிக்காவில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு மாட்டுப்பண்ணை மூலம் 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார் இந்திய இளைஞர்.

kishore left IT job us earning Rs 44 crore Cattle farm.

என்னதான் ஒருவரிடம் வேலை செய்து லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்தாலும், நமக்கு பிடித்தமான வேலையை செய்ய மனம் அலைந்துக் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு சான்றாகவும், அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர்.

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட கிஷோர், காரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.ஹெச்.டிகாக அமெரிக்காவில் இருக்கும் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்திற்கு சென்றார். அங்கு படிப்பை முடித்த கிஷோர், அங்கேயே தங்கிய உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel-லில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மாதம் லட்சகணக்கில் சம்பாதித்தாலும் அந்த வேலையில் அவர் மனம் நிறைவடையவில்லை.

அதன்பின் 6 வருடம் கழித்து 2012ம் ஆண்டில் இந்தியா திரும்பிய கிஷோர் சொந்த நிறுவனம் தொடங்க ஆர்வம் காட்டினார். ஹைதராபாத் நகருக்கு செல்லும்போது, அங்கு தரமான பாலுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருப்பதை அறிந்து அது சம்பந்தப்பட்ட தொழிலை தொடங்க ஆரம்பிதார்.

கிஷோரின் பாலின் தரமும், கடின உழைப்பும் 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள 6,000 குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்தார்.

கிஷோர் தன் பால் பண்ணையின் அவரது மகனின் பெயரை இணைத்து சித்து பார்ம் என மாற்றினார். அதோடு சித்து பார்ம்மில் தற்போது  120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதுடன், தினசரி வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கூறிய கிஷோர், ‘தொடக்கத்தில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கும் போது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதோடு நான் தொடங்கிய தொழில் பால் வகை என்பதால் சீக்கிரம் கேட்டுவிடும். தினசரி பால் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. முக்கியமாக குடும்ப உறுப்பினர்களும் தொழிலுக்கு உதவியாக இருந்தனர்.

பால் மட்டுமல்லாமல் வெண்ணெய், தயிர், மோர், நெய் மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும் விற்பனை செய்கிறோம்’ எனக் கூறியுள்ளார் கிஷோர்.

Contact Us