புகழ் உச்சியிலிருந்து வீழ்ந்த பில்கேட்ஸ்.. அடுத்தடுத்த குற்றச்சாட்டு.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..!

உலகளவில் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால் டெக் நிறுவனத் தலைவர்கள் பலரின் வாழ்க்கையில் சில கருப்புப் பக்கங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும் குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வேளையில் டெக் தலைவர்கள் மத்தியில் பில் கேட்ஸ் மட்டும் மிகவும் சிறந்த மனிதராகக் கருதப்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் குறித்து வெளியாகும் தகவல்கள் டெக் துறையை மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி என்ன செய்தார்…? இதேபோல் இவரின் புகழின் வீழ்ச்சிக்கு விவாகரத்து மட்டும் காரணமில்லை.. பாலியல் குற்றச்சாட்டு முதல் பல உள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருக்கும் பெண் இன்ஜினியர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2020ல் பில் கேட்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகி சுகாதாரம், நன்கொடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல பிரிவுகளில் பணியாற்றத் துவங்கினார். இவரது பதவி விலகல்-க்குப் பின் மிகப்பெரிய விஷயம் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு பெண் ஊழியர்களிடம் முறையற்ற உறவு வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த போது, மைக்ரோசாப்ட் நிர்வாக உறுப்பினர்கள் 2019ல் ஒரு சட்ட நிறுவனத்தை நியமித்து விசாரணையைத் துவங்கியது. இந்த விசாரணையில் பெண் ஊழியர் பில் கேட்ஸ் உடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தகவல் வெளியானது. இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்த உடனேயே மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழு பில் கேட்ஸ் தனது பதவியை விட்டு விலகுவது தான் அவருக்கும், நிறுவனத்திற்கும் சரியானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதை ஏற்காத பில் கேட்ஸ் தொடர்ந்து தனது பதவியில் தொடர்ந்தார். இதற்கிடையில் நிறுவனத்தில் செய்யப்பட்டு வரும் விசாரணை தொடர்ந்து பில் கேட்ஸ்-க்கு எதிராகத் திரும்பியது.

இதனால் அவசர அவசரமாக விசாரணை முழுமையாக முடியும் முன்னரே தனது பதவியை விட்டு விலகினார் பில் கேட்ஸ். இதனால் இந்த விசாரணையின் முடிவுகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போனது. இதேவேளையில் இந்தக் குறிப்பிட்ட பெண் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிர்வாகம் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கிய நிலையில் 2019லேயே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துச் செய்ய முடிவு செய்து சட்ட ஆலோசகரைச் சந்திக்கத் துவங்கினார். மெலிண்டாவின் இந்த முடிவுக்கு மிக முக்கியக் காரணம் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ்-க்கு இருந்த நட்பு தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்தப் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன்..?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த வருடம் வெளியிட்ட செய்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பல முறை சந்தித்துள்ளார். பல முறை இரவு நேரத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நியூயார்க் டவுன்ஹவுஸ்-ல் தங்கியுள்ளார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி பில் கேட்ஸ்-ன் மரியாதையைப் பெரிய அளவில் பாதித்தது எனக் கூறலாம், ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் இளம் வயது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 66 வயதான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த போது சிறையிலேயே ஆகஸ்ட் 2019ல் இறந்தார். இதன் வாயிலாகப் பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் சந்திப்பு நன்கொடை பற்றியது என விளக்கம் அளித்தார்.

ந்தப் பிரச்சனைகள் அனைத்தும் மக்கள் மறக்கும் அளவிற்கு நன்கொடை, மக்களின் நில திட்டங்கள், அடுத்தடுத்த வர்த்தக வளர்ச்சிக்கான முதலீடுகள் எனப் பலவற்றைச் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் பில் கேட்ஸ்-ன் மரியாதை கப்பல் ஏற துவங்கியது. இதற்குக் காரணம் கொரோனாவும், கொரோனா வேக்சினும் தான். கடந்த சில வருடங்களாகவே பில் கேட்ஸ்-ன் நன்கொடை பணிகளின் உண்மைத் தன்மையைப் பதம் பார்க்கும் ஒரு விஷயம், உலகில் பல நாடுகளில் போலியோ முதல் அனைத்து விதமான நோய்களைத் தடுக்கத் தடுப்பு மருந்தைத் தனது அறக்கட்டளை வாயிலாக அளித்து வருகிறார். இந்த வேக்சின் அளிக்கும் போது மக்களின் உடம்பில் மைக்ரோ சிப் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த வேளையில் தான் கொரோனா உலகைத் தாக்கியது, கொரோனாவிற்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கருத்து நிலவிய போது பில் கேட்ஸ் இதற்குக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். இதன் வாயிலாகப் பில் கேட்ஸ்-ஐ அனைவரும் Vaccine Racist என அழைக்கத் துவங்கினர், இதேபோல் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஒரு லாபம் பார்க்கும் நிறுவனம் என்று விமர்சனங்கள் காட்டுத் தீயாய் பரவியது.

இதோடு நிற்காத பில் கேட்ஸ் ஒரு நிகழ்ச்சியில் வளரும் நாடுகளுக்கு வேக்சின் தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக ‘NO’ எனப் பதில் அளித்து உலக நாட்டு மக்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முழுமையாகத் தணிவதற்குள், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருடத் திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ள செய்தி உலக நாடுகளில் பிரேகிங் செய்தியாக வெளியானது.

பில்கேட்ஸ் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி அளிக்கும் அதேவேளையில், இவரின் நன்கொடைகள் அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளது அனைத்தும் லாபத்திற்காகவா என்றும் தோன்றுகிறது. இதேபோல் வெள்ளை சட்டை போட்டவன் எல்லாம் நல்லவன் இல்லை என்றும் உணர்த்தியுள்ளார் பில் கேட்ஸ்.

Contact Us