கவச உடையில் வந்த அருண்ராஜா.. கட்டியணைத்த உதயநிதி.. கலங்க வைக்கும் போட்டோ!

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். மான் கராத்தே, ரெமோ, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அருண் ராஜா. இவரது மனைவி சிந்துஜா. 38 வயதான சிந்துஜாவும் அருண்ராஜா காமராஜும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிந்துஜா. நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்தனர். அருண்ராஜா காமராஜும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனது மனைவி மரணத்தை அறிந்த அருண்ராஜா மருத்துவர்களின் அனுமதியோடு கவச உடை அணிந்து வந்து மனைவிக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய வந்த அருண் ராஜா காமராஜ் மனைவியின் உடலை பார்த்து கதறியழுதார். சிந்துஜாவின் உடலுக்கு நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். கவச உடையுடன் வந்து மனைவியின் உடலை பார்த்து கதறிய அருண்ராஜாவை கட்டியணைத்த உதயநிதி ஸ்டாலின், கண்ணீர்மல்க ஆறுதல் கூறினார்.

தனது நண்பர், கொரோனா பாதிப்பிலும் கவச உடையோடு வந்ததை பார்த்து பொறுக்க முடியாமல் கதறி அழுதார் உதய நிதி ஸ்டாலின். நண்பர்களை மதிக்கும் நல்ல பண்பு அவரிடம் எப்பவுமே உண்டு.

Contact Us