தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி..; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMDK leader Vijayakanth admitted in Chennai hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இதனை அடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

DMDK leader Vijayakanth admitted in Chennai hospital

இதனிடையே நடந்த சட்டசபை தேர்தலில் சில இடங்களில் மட்டுமே வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது பொதுமக்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு சேகரித்தார்.

DMDK leader Vijayakanth admitted in Chennai hospital

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Contact Us