விஜய் டிவியின் படு ஹிட் சீரியல் திடீர் நிறுத்தம்- ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா என சீரியல்கள் படு ஹிட்டாக மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.

எல்லா சீரியல்களிலும் திடீர் திருப்பங்கள் என நடக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் முழு லாக் டவுன் போடப்பட்டுள்ளது, இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் மே 31ம் தேதி நிறுத்தப்படவுள்ளதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன.

எனவே சீரியல்களின் படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில சீரியல்கள் அதிகம் படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சில சீரியல்கள் அதிகம் எடுக்கப்படவில்லை.

எனவே தற்போது விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த அன்புடன் குஷி சீரியல் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

Contact Us